Monday, October 2, 2017

கிரக சமயம் (Planetary State)




கிரக சமயம் (Planetary State)

உடுதசை நடத்தும் தசாநாதன் எந்த நிலையில் (Planetary State) இருக்கின்றார் என்பதை பார்த்து அதன் பலனையும் அறிந்து கொண்டால் அந்த கிரகம் தனது தசையில் கொடுக்கும் மற்ற பலன்களுடன் இதனையும் சேர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

இதனை எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம். ராசிக் கட்டத்தில் மேஷம் முதல் லக்னம் வரை எண்ணி வந்த எண்ணிக்கையுடன், லக்னம் முதல் தசாநாதன் இருக்கும் வீடு வரை எண்ணி வந்த எண்ணிக்கையைக் கூட்டி, அதனை, அந்த கிரக தசா வருடங்களின் இருமடங்கால் பெருக்கி வந்த தொகையை 27ஆல் வகுக்க வந்த மீதி எண் என்ன என்பதை அறிவது அந்த கிரகத்தின் கிரக சமயம்(Planetary State) என்று அழைக்கப்படும்.

இதனை எவ்வாறு கணக்கிடுவதென்று பார்ப்போம்.



உதாரணத்திற்கு, ஒருவர் கன்னி லக்னத்தில் பிறந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வோம். அவருக்கு தற்போது தசை நடத்தும் செவ்வாய்  துலாத்தில் இருப்பதாகக் கொள்வோம். மேஷத்திலிருந்து கன்னி வரை எண்ணி வந்த எண்ணிக்கை 6. அதே போல கன்னியிலிருந்து செவ்வாய்  இருக்கும் ராசி வரை எண்ண வரும் எண்ணிக்கை 2. இந்த இரண்டையும் கூட்ட வரும் தொகை 8. இதனை சூரியனின் தசா வருடங்களான 7இன் இரு மடங்கால், அதாவது 14ஆல் பெருக்கி வரும் தொகை 112. இதனை 27ஆல் வகுக்க வரும் மீதி 4. இந்த 4க்குண்டான கிரக நிலை சிவ வழிபாடு “ இதற்குரிய பலன் பூமியால் வருமானம், வாகன யோகம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை. இப்படி 27 நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. அவற்றைப் பார்ப்போம்.



குறிப்பு: இந்த பலன்களை அப்படியே நேரடியாக எடுத்துக் கொள்ளாமல், ஜாதகரின் பின்னணியையும் மனதில் வைத்து பலன் அறியவும்.





1.ஸ்நானம்

நல்ல புத்திரர்கள், தாம்பத்திய மகிழ்ச்சி, மக்களால் மரியாதை, எடுக்கும் முயயற்சிகளில் வெற்றி.


2.வஸ்திரதாரணம்(ஆடை அணிகலன்)

அரசு, அரசால் விருது, பணம் சேர்த்தல், ஆடை அணிகலன், ரத்தினம், வாசனை திரவியம், பொன் பொருள் சேர்க்கை, வலுவான பலம்.


3.விபூதி

அரசாங்க விருதுகள், மகிழ்ச்சி, கொண்டாட்டம், வேலையில் ஈடுபாடு.


4.சிவ வழிபாடு

பூமியால் வருமானம், வாகன யோகம், மகிழ்வான வாழ்க்கை.


5.பஞ்சாட்சர ஜெபம்.

பூமி சேர்க்கை மற்றும் வருமானம், அரசாங்க தொந்தரவு, பணம் இழப்பு.


6.சிவ பூஜை

பாபருடன் சேர்க்கை, மக்களின் அன்பு மற்றும் தனலாபம்.


7.உபாசனம்

யாகம் செய்ய முயற்சி, இருதய நோய், கல்வி சம்பந்தப்பட்ட உபாகமம், பேராசிரியர், நுரையீரல் தொந்தரவு.


8.விஷ்ணு பூஜை

உறவினர் மூலம் தனலாபம், பூமியால் லாபம், எதிரிகளை வெற்றி கொள்ளுதல், பேரின்பம்.


9.நமஸ்காரம்

இனிய வார்த்தை, வாகணயோகம், அதே சமயம் மனசஞ்சலம்.


10.கிரிவலம்

மண்ணீரல் நோய், வயிற்றுப்போக்குடன் சுரம், அரசு தொந்தரவு, துர்க்கை வழிபாடு.


11.ருத்ரபூஜை

கிராமத் தலைவர்(Town and City), மனைவி குழந்தைகள் வளம், நிதியால் இன்பம் மற்றும் மகிழ்ச்சி.


12.அதிதி பூஜை

பொக்கிஷச் சேர்க்கை, காற்று, மந்திரவாதி(ரஜோ குணம்)


13.போஜனம்

தன் ஜாதி,மதக் கோட்பாடுகளை இழப்பவன், மகிழ்ச்சி இல்லாதவன், மற்றவரை இகழ்பவன்.


14.உடகபாதம்(Foot of Water Pot)

தடை செய்யப்பட்ட உணவு, உறவினர் நண்பர் பகை.


15.கோபம்

ஏழ்மை, வெறுக்கத்தக்கவன், பகையாளி 


16.தாம்பூலம்

ஆடை சேர்க்கை, வாகனம், தனம், நற்சொல், அரசருடன் நட்பு, தகுதியான மேலாண்மை திறமை.


17.ஆஸ்தானம்

நல் இதயம், நடுநிலை, சோம்பல், மந்திர சித்தி, அடுத்தவருக்கு உதவுபவன், நன்னடத்தை.


18.கிரீடதாரணம்

படைத் தளபதி, தனலாபம், பதிப்பு, மதிப்புள்ளவன் 


19.ரகசியம்

நற்செய்தி, ரகசியம், சோம்பல்.



20.ஆலஸ்யம் (தாமதம்)

சோம்பல், மடையன், மந்தன், சாஸ்திர நிபுணன்.


21.நித்திரை

மற்றவர் வேலையை எடுத்துச் செய்பவன், ஸ்திரீ லோலன், மனைவியை வெறுப்பவன், தாயை வெறுப்பவன்.


22.ஜலபானம்

அடுத்தவரி வெறுப்பவன், மூத்தோர், ஆசிரியரை வெறுப்பவன், நோய் உள்ளவன்.


23.அமிர்தபானம்

ஆரோக்யம், அன்பான மனைவி, குழந்தைகள், வளமான சாப்பாடு, அரசு மரியாதை.


24.தன அர்ச்சனை

மதிப்பானவன், சொத்து, எடுத்த காரியத்தில் வெற்றி, பல்வகை லாபம்.


25.கிரீட விஜர்சனம்

வேலை இழப்பு, தகுதி இழப்பு, தூபம், மக்களால் கண்டனம், ஒதுக்கப்பட்டவ்ன், மதிப்புள்ளவன்.


26.அதிநித்திரை

தமோ குணம், முடக்கு வாதம், நுரையீரல் நோய், அரசாங்க விரோதி.


27.ஸ்த்ரீ சம்போகம் 
கவர்ச்சியானவன், வெறுப்பு, அடுத்தவ்ர் நிந்தனை, துன்பசாகரம்

1 comment:

hhran said...

சூரியனின் தசா வருடத்தை 6ஆக மாற்றவும். 7 இல்லை. சுட்டிக்காட்டியதற்கு மன்னிக்கவும். மற்றபடி உங்கள் விபரங்கள் சூப்பர்.

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...