|| Shri Ganeshaya Nama ||
ஜாதகத்தில் பிறப்புயோகியின் முக்கியத்துவம்
27 நட்சத்திரங்களையொட்டி 27 யோகங்கள்
இருக்கின்றன. பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகும் புள்ளி 93 பாகை 20 கலை ஆகும். இந்தப்
புள்ளியிலிருந்து முதல் யோகமான விஷ்கம்பம் தொடங்கி வரிசைக் கிரமமாக 27 யோகங்கள்
இருக்கின்றன. இவற்றின் அளவும் நட்சத்திரங்கள் போலவே 13 பாகை 20 கலை என்பதால்
ஒவ்வொரு யோகத்தின் அதிபதியாக அது விழும் புள்ளியிலிருக்கும் நட்சத்திரத்தின்
அதிபதி அமைவார். அவரே பிறப்பு யோகி எனப்படுவார். அந்த நட்சத்திரம் விழும் வீட்டின்
அதிபதி பிரதியோகி எனப்படுவார். அதாவது அவரும் நன்மை செய்வார். பிறப்பு யோகியின்
நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 6ஆவது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகி
எனப்படுவார்.
மனித வாழ்வை நிர்ணயம் செய்வதில் இந்த
யோகங்களுக்கு முக்கியமான இடமுண்டு. குறிப்பாக நோய்கள் நிவாரணத்திற்கு இந்த
யோகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இனி யோகங்களை எப்படி கணக்கிடுவதென்று
பார்ப்போம்.
சூரியனின் ஸ்புடத்தையும் சந்திரனின்
ஸ்புடத்தையும் கூட்டி வருகின்ற தொகையுடன். முதல் யோகமான விஷ்கம்பத்தின் ஆரம்பப்
புள்ளியான பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகும் 93 பாகை 20 கலைகளை கூட்டி வருகின்ற
ஸ்புடம் தான் யோகத்தின் ஸ்புடமாகும்.
உதாரணம்.
20.9.2015 அன்று காலை 5.30 மணிக்கு சூரியனின்
ஸ்புடம் 152 பாகை 40 கலை , சந்திரனின் ஸ்புடம் 226 பாகை
29 கலை. இவை இரண்டையும் கூட்ட
152 40 + 226 29 = 379 09 இத்துடன் முதல்
யோகத்தின் ஆரம்பப் புள்ளியான பூசம் நட்சத்திரம் தொடங்கும் 93 பாகை 20 கலைகளை கூட்ட
379 09 + 93 20 = 472 29 ஆகும். ஒரு ராசி
வட்டம் என்பது 360 பாகைகள். இது 360 பாகைகளுக்கு மேலுள்ளத்தால் இதிலிருந்து 360ஐ
கழிக்க 472 29-360 00 = 112 29 ஆகும்.
இந்த 112 பாகை 29 கலையில் மேஷம் தொடங்கி 3
ராசிகளுக்குரிய 90 பாகைகளைக் கழித்தால் மீதி 22 பாகை 29 கலை வரும். இந்த பாகையில்
விழும் நட்சத்திரம் ஆயில்யமாகும். இந்த நட்சத்திற்குரிய பிரீதி யோகத்தில் இந்த
நேரம் அமைந்துள்ளது..
ஜனன யோகிக்கு 4ஆவது யோகியும், 7வது
யோகியும் ஒரே குழுவில் இருப்பார்கள். ஒரே குழுவில் இருக்கும் கிரகங்கள்
எந்தவிதத்திலும் யோகத்தை கூட்டியே கொடுப்பார்கள். உதாரணமாக தற்போது கணக்கிட்ட
பிரீதியோகம் ஆயில்யத்தில் விழுவதால் அந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன்.ஆயியத்தின்
4ஆம் நட்சத்திரம் உத்திரம். அது போலவே ஆயில்யத்தின் 7ஆம் நட்சத்திரம் சுவாதி. அதன்
அதிபதி ராகு. சூரியன் ,புதன் மற்றும் ராகு ஆகிய மூவரும் ஒரே
குழுவில் இருப்பதால் இவர்கள் இந்த ஜாதகருக்கு நன்மையையே செய்யக்
கடமைப்பட்டவர்களாவர்.
இதைப்போலவே யோகம் அமையும் நட்சத்திரத்திற்கு
6ஆவது நட்சத்திரம், அதனுடைய யோகத்தின் அதிபதி
அவயோகி என்று பெயர் பெற்று தீமை செய்வதில் முன்னிலையில் இருப்பார்.
உதாரணம் பிரீதி யோகத்திற்கு 6ஆவது யோகம் சுகர்ம யோகமாகும். இது விழும் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி
செவ்வாய் அவயோகி ஆவார். இதை எளிமையாக புரிந்து கொள்ள யோகம் அமையும்
நட்சத்திரத்தில் இருந்து வரும் 6வது நட்சத்திரத்தின் அதிபதி அவயோகி என்று நிர்ணயம்
செய்து கொள்ளலாம்.
அடுத்து, இந்த
பிரீதி யோகம் அமையும் நட்சத்திரமான ஆயில்யம் கடக ராசியில் விழுவதால் அதன் அதிபதி
சந்திரன் பிரதியோகி என்று அழைக்கப்படுவார். பிரதியோகி என்பவர் யோகத்தைக்
கொடுக்கும் கிரகத்தைச் சார்ந்து அதனை பரிசீலித்து யோகத்தைத் தருவதால் பிரதியோகி
என்று அழைக்கப்படுகிறார். யோகங்களின் பட்டியலைக் காண்போம்.
யோகங்கள்
|
நட்சத்திரங்கள்
|
யோகி
|
விஷகம்பம்--கண்டம்--பரிகம்
|
பூசம்-அனுசம்-உத்திரட்டாதி
|
சனி
|
பிரீதி—விருத்தி-சிவம்
|
ஆயில்யம்-கேட்டை-ரேவதி
|
புதன்
|
ஆயுஷ்மான்-துருவம்-சித்தம்
|
மகம்-மூலம்-அசுவினி
|
கேது
|
சௌபாக்யம்--வியாகதம்—சாத்யம்
|
பூரம்-பூராடம்-பரணி
|
சுக்கிரன்
|
சோபனம்—ஹர்ஷனம்-சுபம்
|
உத்திரம்-உத்திராடம்-கிருத்திகை
|
சூரியன்
|
அதிகண்டம்—வஜ்ரம்-சுக்லம்
|
ஹஸ்தம்—திருவோணம்—ரோகிணி
|
சந்திரன்
|
சுகர்மம்-சித்தி-பிரம்மம்
|
சித்திரை-அவிட்டம்-மிருகசீரிடம்
|
செவ்வாய்
|
திருதி—வியதீபாதம்—இந்திரம்
|
சுவாதி-சதயம்-திருவாதிரை
|
ராகு
|
சூலம்—வரீயான்—வைத்ருதி
|
விசாகம்—பூரட்டாதி—புனர்பூசம்
|
குரு
|
நல்லியல்புடைய
ராசி இருப்பது போல எதிர் இயல்புள்ள ராசி இருக்கிறது இயல்பு.அதைப்போல, நல்ல இயல்புடைய யோகி இருப்பதைப்போல
அதற்கு எதிர் இயல்புடைய யோகி இருப்பார். அவர் அவயோகி என அழைக்கப்படுவார்.அதாவது யோகத்தை எதிர்மறையாக
மாற்றக் கூடியவர் என்று பொருளாகும்.
யோகமும் அவயோகமும்.
வரிசை
|
யோகி
|
அவயோகி
|
1
|
சூரியன்
|
சனி
|
2
|
சந்திரன்
|
புதன்
|
3
|
செவ்வாய்
|
கேது
|
4
|
புதன்
|
செவ்வாய்
|
5
|
குரு
|
சூரியன்
|
6
|
சுக்கிரன்
|
குரு
|
7
|
சனி
|
சந்திரன்
|
8
|
ராகு
|
சுக்கிரன்
|
9
|
கேது
|
ராகு
|
மேற்கண்ட முறையில்
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எதிர்மறையான கிரகம் இருப்பதை அறியலாம். மேலும் 9 கிரகங்களும்
மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
1.கேது,சந்திரன்,குரு
2.சுக்கிரன்,செவ்வாய்,சனி
3.சூரியன்,ராகு,புதன்
பலன்கள் அடிப்படையில் ஒரு குழுவில் உள்ள 3 கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்புடைய கிரகங்களாகும். அதாவது ஒரு குழுவில் உள்ள கிரகம் பிறப்பு யோகி அந்தஸ்து பெற்றால் அக்குழுவில் உள்ள மற்ற இரு கிரகங்களும் பிறப்பு யோகி தரும் நற்பலன்களுக்கு இணையாகவோ அல்லது உதவியாகவோ இருக்கும் என்பதே இக்குழுவின் செயல்பாடுகள். அதாவது யோகி தரும் பலன்களை இயற்கையாகவே மற்ற இரு கிரகங்களும் உட்கொள்ள வேண்டும் என்பதே பொருள்.
இதில் முழுமையான
ஈடுபாடு ராகு கிரகத்திற்கு உண்டு என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும். ஒருவருக்கு சூரியனோ, புதனோ பிறப்பு யோகியாக இருந்தால்
ராகு அவர்களுக்கு இணையான நற்பலன்களைச் செய்வார்.
அதே போல சூரியன் பிறப்புயோகியாக இருக்கும் போது தன்னுடன் சேர்ந்து அஸ்தமனமாகும் கிரங்களின் பலன்களை தானே நல்லவிதமாக செயல்படுத்துவார்
No comments:
Post a Comment