கண்டாந்தர நட்சத்திர தோஷம்-உதாரண ஜாதகம்
குழந்தை பிறப்பு : 8.1.2016, வெள்ளிக் கிழமை 12.34 PM (Rectified), சேலம்.,
ஆண் குழந்தை ஜனனம்
.
நட்சத்திரம் : மூலம் 1 ஆம் பாதம்.
(கண்டாந்தர நட்சத்திரம்)
திதி :
கிருஷ்ணபட்ச சதூர்தசி
சூனிய ராசிகள் :
மிதுனம்,கன்னி தனுசு,மீனம்.
குழந்தை பிறப்பு : சிசேரியன் (மாலை சுற்றி பிறந்தது)
யோகம் :
விருத்தி
யோகி :
புதன்
அவயோகி :
செவ்வாய்
பிரதியோகி :
செவ்வாய்
புதன் அஸ்தங்கம். கேது தசையில் இருப்பு: 6.2.13.
கேது
|
ல
|
ல சந்
|
||||||||
ராசி
8.1.2016, சேலம்.
|
புத
|
நவாம்சம்
|
கேது
|
|||||||
புத (வ)
|
குரு (வ)
|
ராகு
|
||||||||
சந், சூரி
|
சுக், சனி
|
செவ்
|
ராகு
|
சுக், செவ், குரு,சனி
|
சூரி
|
|||||
18.3.2022 வரை கேது தசை
14.10.2016 வரை சுக்கிர
புக்தி
20.1.2016 வரை கேது
தசையில் சுக்கிர புக்தியில், செவ்வாய்
பிரியந்தர தசை நடைபெற்று வருகிறது. மூலம் நட்சத்திரம் 1 பாகை 30 கலை 49 விகலையில்
உள்ளது. மூலம் நட்சத்திரத்தை 12 சம பாகமாக பிரிக்க 2வது பாகம் வருகிறது. இந்த பாகம் கண்டாந்தர கண்டம் என்கிற தோஷத்தைப் பெறுகிறது. இதன் பலன் தாய்
மற்றும் தாய் வர்க்கத்தை பாதிக்கும். லக்னத்தை லக்னநாதன் செவ்வாய் பார்ப்பதால், குழந்தைக்கு கண்டமில்லை . குருவும் 5 ஆம் வீட்டிலிருந்து, வக்ர ரீதியில் லக்னத்தைப் பார்க்கிறது.
திதியானது கிருஷ்ணபட்ச
சதூர்தசியாகும். அன்று திதி சூன்யம் பெறும் ராசிகள், மிதுனம்,கன்னி, தனுசு மற்றும்
மீனம் ஆகும்.
இந்த நான்கு ராசிகளின்
செயல்பாடுகளை நாம் பார்க்க வேண்டும். இதில் மூன்றாம் வீடு இளைய சகோதரத்தையும், 6 ஆம் வீடு தாய் மாமனையும், 9 ஆம் வீடு தந்தையையும், 12 ஆம் வீடு விரையத்தையும்
குறிக்கும்.
இளைய சகோதரத்தைப் பற்றி
இப்போது பேசவேண்டியதில்லை. 12 ஆம் வீட்டு பலனையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்து கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டியது 9 ஆம் வீடு. 9 ஆம் வீட்டிற்கதிபதியான குரு 5 ஆம் வீட்டிலிருந்து
பார்ப்பதோடு மட்டும் அல்லாமல், 9
ஆம் வீட்டில் இருக்கும் தந்தைக்காரகனாகிய சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் தந்தை
ஸ்தானத்திற்கு தோஷம் இல்லை.
விஞ்சியிருப்பது, சூன் ய
ராசிகளில் ஒன்றான கன்னி மட்டுமே. தாய் காரகனாகிய சந்திரன், தன்னுடைய தாய் ஸ்தானத்திலிருந்து 6 ஆம் வீட்டில் சூரியனுடன் இருந்தாலும்,, குரு பார்ப்பதினால் தாய்க்கு பெரிய அளவில் தோஷமில்லை.
நட்சத்திரப் பிரகாரம்
கண்டாந்தர நட்சத்திரம் என்பது உண்மைதான். இருந்தாலும், இயற்கை சுப கிரகமாகிய குரு பார்ப்பதினால்
தோஷம் பெருமளவில் குறைகிறது.
சூன் ய ராசிகளில்
பெருமளவு பாதிப்புக்குள்ளாவது கன்னி மட்டுமே. அதன் நாயகன் புதன் வக்ரரீதியாக 10
ஆம் வீட்டில் இருக்கிறார். அவர் இருக்கும் நட்சத்திரம் உத்திராடம்.
இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை, 6 ஆம் வீடு என்பது தாய் மாமனை குறிக்கும்.
அங்கே ராகு இருப்பதும், அந்த வீட்டிற்கு ஏழாம் வீட்டில் தசை
நடத்தும் கேது, பூரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்து
இருப்பதும், அதற்குரிய குரு 6 ஆம் வீட்டிற்கு 12 இல் மறைந்து
இருப்பதும் தாய் மாமனுக்கு தோஷமே.
19.1.2016 வரை, கேது தசையில் சுக்கிரன் அந்தரம், செவ்வாய் பிரயாந்தரம் நடைபெறுகிறது. இந்த காலகட்டம் தாய்மாமனுக்கு கண்டம்
என்றே சொல்லலாம்.
சந்தர்ப்பவசமாக, 13.1.16 அன்று இரவு சுமார் 11.15 மணி
அளவில் தாய் மாமன் ஒரு விபத்தை சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது. அந்த நேரத்தைக்
கணிக்கும்போது கன்னி லக்னமாக வருகிறது. மேற்குறிப்பிட்ட குழந்தையின் ஜாதகப்படி
தாய் மாமனின் ஸ்தானமும் கன்னியே ஆகும்.
இதன் மூலம் நாம் அறிய
வேண்டியது, திதி சூன் யம் பெறும் ராசிகள், தங்கல்து இயல்பை ஏதோ ஒரு வகையில் காட்டிவிடும். உதாரண ஜாதகத்தில், 6 ஆம் வீடு கன்னி என்பதாலும், அது திதி சூன்யம்
பெறும் ராசி என்பதாலும், அந்த இடம் தாய் மாமனைக் குறிக்கும்
என்பதாலும், தாய் மாமனுக்கு கண்டத்தைக் காண்பித்திருக்கிறது.
விபத்து நடந்த நேரத்தில்
கணித்த ஜாதகம் கீழே.
No comments:
Post a Comment