திரிம்சாம்சம்
முதுமையில் ஏன் பெண் பலமானவளாகவும்,ஆண் பலம் குறைந்தவனாகவும்
மாறுகிறார்கள்? --- காரணம் திரிம்சாம்சம் என்னும் ஜோதிட சூட்சுமம்
ஆண் ராசியில் 5,5,8,7,
5 பாகைகளில் முறையே
செவ்வாய் , சனி,
குரு ,
புதன் ,
சுக்கிரன் என்ற
அமைப்பிலும், அதுவே பெண் ராசிகளில் 5,7,8,5,5 பாகைகளில் முறையே சுக்கிரன்,புதன், குரு , சனி, செவ்வாய்.என்ற அமைப்பிலும் இருக்கும்.. இங்கே ஆண்
ராசி, பெண்
ராசி என்பது ஆண்கள், பெண்கள் உடைய ராசிகள் என்று அர்த்தம்
கொள்ளக் கூடாது...மேஷம் ஆண் ராசி , ரிஷபம் பெண் ராசி .. இப்படியே மாறி மாறி வரும். ஒருவருடைய குணாதிசயத்தை நுட்பமாக அறிய அவருடைய லக்னம் எந்த கிரகத்தின் திரிம்சாம்சத்தில் வருகிறது என்று பார்த்தால் தெரியும்.... இதன் மூலம் ஆண் பெண் வாழ்க்கை முறையை மறைமுகமாக நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நன்றாக கவனியுங்கள் ஆண் ராசியில் முதலில் ஆரம்பிப்பது செவ்வாய் திரிசாம்சம்.. அதாவது, கோபம் முரட்டுத்தனம் . முடிவது சுக்கிரன் ,பெண்மைத் தன்மை.... அதாவது முரட்டுத்தனத்துடன் ஆண்மகனாக வாழ்வைத் துவங்கும் ஆண் முடிவில் பெண்மைத் தன்மை அடைந்துவிடுகிறான்..... இதையே பெண் ராசியில் பார்த்தோமானால் , ஆரம்பம் சுக்கிரன் , பெண்மைத் தன்மை... முடிவு செவ்வாய்.... ஆண்மைத் தன்மை... நிரவாகத் திறனையும் குறிப்பிடும்... சுகமானப் பெண்ணாக வாழ்வைத் துவங்கும் பெண் முடிவில் ஆண் தன்மை அடைந்து விடுகிறாள்... எனவேதான் ஒரு ஆண் தனது அந்திம காலத்தில் பெண்துணை இல்லையென்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான்... அதே ஒரு பெண் தனது அந்திம காலத்தில் தனியாகவே வாழ்ந்தாலும் மிகுந்த தெளிவுடனும், நிர்வாகத் திறனுடனும் இருக்கிறாள்.... இது தான் இந்த திரிம்சாம்சத்தின் தத்துவம்...
இது போல ஒருவர் பிறந்த கரணமே அவரது செயல்பாட்டு முறையைத் தெரிவிக்கும்!
No comments:
Post a Comment