Wednesday, October 4, 2017



 || Shri Ganeshaya Nama ||

செவ்வாய் தோஷம்

செவ்வாய் லகனத்திற்கு 2,4,7,8,12 இல் இருந்தால் தோஷம் என்பது பொதுவான கருத்து. இது தவிர சந்திரன் நின்ற ராசிக்கு மேற்குறிப்பிட்ட இடங்களிலும் இன்னும் சிலர் சுக்கிரனுக்கு மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள்.
இது போக சில லக்னங்களுக்கு லக்னத்திலேயே செவ்வாய் இருந்தால் தோஷமாகும். இது அனுபவ பூர்வமாக தோஷமென்றே ஒத்துழைக்கிறது. செவ்வாய் பிரத்யேக பார்வையாய் தானிருந்த வீட்டிலிருந்து 4 மற்றும் 8ஆம் வீடுகளை பார்க்கின்றது. 4ஆம் வீடு சுகத்தையும் 8ஆம் வீடு ஆயுளையும் நிர்ணயிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகையால் செவ்வாய் லக்னத்திலிருந்தாலும் ஒரு சில லக்னங்களுக்கு தோஷமே என்பது உறுதியாகிறது. சிறப்புப் பார்வை எட்டாம் வீட்டில் விழுகிறது என்றால் அது லக்னமாக இருந்தாலும் தோஷமே.
மேலே குறிப்பிட்ட இடங்களிலிருந்து செவ்வாய் தோஷத்தை உண்டாக்கினாலும் கடுமையான தோஷம் என்பது 7ஆம் இட செவ்வாய் ஆகும்.  7 என்பது களத்திரத்தையும் 8 என்பது ஆயுளையும் நிர்ணயம் செய்வதாகும்.
பரிகாரச் செவ்வாய் என்றால் தோஷத்தின் கடுமையை குறைக்குமே தவிர தோஷமே இல்லையென்று அர்த்தம் இல்லை.
ஆண் பெண் இருபாலருக்கும் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணத்திற்கு சிபாரிசு செய்யலாம்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்

    செவ்வாய்க்கு ஆட்சி,உச்சம்,நீச வீடுகளாக மேற்க்கண்ட வீடுகள் இருந்தால் தோஷமில்லை.

   சிம்ம லக்ன ராசிக் காரர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை.

    கிரக பரிவர்த்தனையென்றால் தோஷமில்லை.

பரிகாரம்
1.செவ்வாய்க் கிழமைகளில் நவகிரகங்களில் செவ்வாய், மற்றும் முருகப் பெருமானை வழிபடவும்.
2.வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு செய்தால் நல்லது. அதிலும் மாசி மாத செவ்வாய்க் கிழமைகளில் துவரை தானம் செய்து வழிபாடு செய்தல் மிகவும் நல்லது.
3.சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் தோஷமே. அதற்கும் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சூரியனார் கோவில் வழிபாடு சிறந்த பரிகாரமாகும்.

ராசிக்கட்டதில் செவ்வாய் எந்தெந்த நிலைகளில் இருந்தால் தோஷம் என்று அறிந்து கொள்வதற்கு எளிதாக கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. பார்த்து பயன் பெறுங்கள்.

பாவம்
மேஷ
ரிஷ
மிது
கட
சிம்ம
கன்
துலா
விரு
தனு
மகர
கும்
மீன
முதல்

ஆம்
ஆம்


ஆம்
ஆம்

ஆம்

ஆம்
ஆம்
இரண்டு
ஆம்




ஆம்

ஆம்

ஆம்
ஆம்

நான்கு


ஆம்


ஆம்


ஆம்


ஆம்
ஏழு


ஆம்


ஆம்


ஆம்


ஆம்
எட்டு



ஆம்



ஆம்


ஆம்

பன்னிரெண்டு






ஆம்


ஆம்

ஆம்



No comments:

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...