ஜோதிட நுணுக்கங்கள் - ஏழாம் பாவம்
லக்னத்திற்கு
சமமாக ஏழாம் பாவத்தை தொடாமல், ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது.என்னதான் , நட்சத்திர பொருத்தம், ராசி, லக்ன பொருத்தம் இருந்து , திருமணம் நடந்தாலும், இருவர் ஜாதகத்திலுமோ அல்லது
ஒருவர் ஜாதகத்தில் மட்டுமோ, மறுமணம் நடக்க வேண்டும் என்று
இருந்தால், கண்டிப்பாக நடந்தே தீரும்.7,11 அதிபதிகள் எவ்விதத்திலாவது
அன்னியோனியமாக இருந்தால், இரண்டாம் திருமணம் நிச்சயம் நடந்தே
தீரும்.
11 ஆம்
அதிபதி வலிமை அடைந்து இருந்து அவன் தசை நடை பெற்றாலும், இரண்டாம் திருமணம்
நடந்தேறும்.7 இல் குரு
இருந்தால் இளைய மனைவி மூலம் குழந்தை பெறுவதை குறிக்கும்.
துறவறம்
போவதற்கு 7 ஆம் இடம் கேட்டு இருக்க வேண்டும். அதில், 5,9 ஆம் இடங்கள் பலம்
பெற்று இருந்தால், நல்ல சாமியார்,
அதுவும் கெட்டு இருந்தால் போலி சாமியார். இதில் கேதுவின் நிலையையும் ஆராய வேண்டியது
அவசியம்.7 ஆம் வீடு
அல்லது 2 ஆம் வீடு இவற்றுக்கு கேது சம்பந்தம், ஏழாம் அதிபதி பகை , நீசம் பெறுவது, இந்த அமைப்புகளெல்லாம், துறவரத்தை குறிக்கும். ராகு, கேதுக்களுக்கென்று தனி
வீடுகள் இல்லை. ராகு கும்ப சனியை போலவும், கேது, விருச்சிக செவ்வாய் போலவும் பலன் கொடுக்கும். இதில், சம்பந்தப் பட்ட ஜாதகருக்கு, கும்பமும், விருச்சிகமும் எந்த பாவமாக வருகிறதென்றும், சனி
மற்றும் செவ்வாயின் நிலையை ஆராய்ந்தும் , ராகு , கேதுவின் பலத்தை கணக்கிட வேண்டும்.
சந்திரனுடன்
ராகு, கேது
இருப்பது, எப்படியும் தவறாகும். கேது மனதை நோகடிப்பார். ராகு, வீரியத்துடன், தவறுகளை செய்யத் தூண்டுவார்.
சந்திரன், ராகு, கேதுக்களுக்கு, குறைந்தது 12 பாகை முன்போ அல்லது பின்போ தள்ளி இருந்தால், பாதிப்பு இல்லை. எனினும், ஒரு பாவத்தில், இவை சேர்ந்து இருப்பது தவறுதான். மிகச்சிறிய அளவிலாவது, அது வெளிப்படும்.
ஒரு
ஸ்தானத்தின் பலனை ஆராயும் போது , ஸ்தான அதிபதி இருக்கும் வீடு,
ஸ்தானாதிபதி ஏறிய நட்சத்திரம், ஸ்தானத்தை பார்க்கும்
கிரகங்கள், ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் இவற்றை
அனுசரித்து பலன் சொல்ல வேண்டும். இவற்றுள் முதன்மையானதாக,
ஸ்தானாதிபதி இருக்கும் இடத்தையொட்டியே பலன்கள் இருக்கும். மற்ற அம்சங்கள், நன்மை அல்லது தீமையை கூட்டவோ, குறைக்கவோ உதவும்
அவ்வளவுதான்.
ஒரு
ஸ்தானத்தின் பலனை ஆராயும் போது, அந்த ஸ்தானாதிபதி லக்னத்திற்கு சுப ஸ்தானங்களில் நட்பு
ரீதியில் இருந்தால் நன்மைகள் நடக்கும். பகை, நீசம் அஸ்தமனம், கெட்ட பாவங்களில் இருந்தால் தீமைகள் நடக்கும். மறைவு ஸ்தானங்களில்
இருந்தால், வினைப்பயனை அனுபவிக்கும் நிலை உண்டாகும். இது
எந்த பரிகாரத்திற்கும் கட்டுப்படாது.
No comments:
Post a Comment