Friday, October 6, 2017




முகூர்த்தம்


முகூர்த்தம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுப்பதாகும். இது இரண்டு நாழிகை அல்லது 48 நிமிடங்கள் நேரம் கொண்டதாகும். முகூர்த்தம் என்பதை தோஷமற்ற காலம் என்றும் சொல்லலாம். அதாவது ஒரு நாளில் தோஷமற்ற அல்லது தோஷம் விலக்கப்பட்ட நேரம். பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியனவாகும். இதில் வாரம் என்பது ஆயுளையும், திதி என்பது ஐஸ்வர்யாத்தையும், நட்சத்திரம் என்பது பாவத்தை நீக்குதலையும்  யோகம் என்பது நோயை தீர்ப்பதையும் மற்றும் கரணம் என்பது நினைத்த காரியத்தை நிறைவேற்றுதலையும் குறிக்கும்.இதில் தோஷம் விலக்கப்பட்டதென்று வாரத்தில் சில நாட்களும் , திதிகளில் சில திதிகளும், நட்சத்திரத்தில் சில நட்சத்திரங்களும்,, யோகத்தில் சில யோகங்களும் , கரணத்தில் சில கரணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிப்பதே சுப முகூர்த்தமாகும்.

No comments:

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...