Friday, February 9, 2018




மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம்.
ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள் உண்டு. அவற்றில் மிகச் சரியாக பொருந்துபவற்றைக் காண்போம்.
1.லக்னத்துக்கு 7க்குடையவன் நவம்ஸத்தில் அமர்ந்திருக்கும் ராசியோ அல்லது அதற்குத் திரிகோணங்களோ மனைவியின் ராசியாக வரும்.
அதாவது ஜாதகர் கன்னி லக்னம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு 7ஆம் வீடு மீனம். அதற்கு அதிபதியான குரு நவாம்ஸக் கட்டத்தில் கடகத்தில் இருப்பதாகக் கொள்வோம். இதன்படி கடகம் மற்றும் அதன் திரிகோணங்களான விருச்சிகம், மீனராசிகளில் ஒன்று மனைவியின் ராசியாக இருக்கும்.
2.ஜைமினி சூத்திரத்தின்படி, தாரக்காரகன் ராசிக்கட்டத்தில் எங்கு அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசி மற்றும் அதற்கு திரிகோண ராசிகளில் ஒன்றாக மனைவியின் ராசி இருக்கும்.
தாரக்காரகன் என்பவர், ராசிக்கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களில் எந்த கிரகம், தான் அமர்ந்திருக்கும் வீட்டின் 30 பாகைகளில் குறைவான தூரம் பயணம் செய்திருக்கிறதோ அந்த கிரகமே தாரக்காரகன் ஆவார். சாஃப்ட்வேரில் பார்க்கும் பொழுது கிரக பாதச்சாரங்களில் DK என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
3.ஜைமினி சூத்திரங்களில் இன்னொன்று ஆருடபதம். லக்னம் முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆருடபதம் கணிக்கலாம். அவற்றில் 7ஆம் வீட்டின் ஆருடபதம் ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் விழுகிறதோ அந்த வீட்டின் அதிபதி அமர்ந்திருக்கும் ராசியோ அல்லது அதற்குத் திரிகோண ராசிகளில் ஒன்றோ மனைவியின் ராசியாக அமையும். சாஃப்ட்வேரில் கணிக்கப்பட்ட ராசிக்கட்டத்தில் A7 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேற்கண்ட மூன்று விதிகளில் ஏதோ ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றுமோ அனைவருக்கும் பொருந்தி வருகிறது.




Thursday, February 1, 2018



லக்னாதிபதி பாதக ஸ்தானங்களில் இருந்து திரிகோணங்களும் பலமிழந்திருந்தால் சாதகமான தசை நடந்தாலும் புண்ணியமில்லை.



சில நேரங்களில் 6,8,12ஆம் அதிபதி தசாபுத்திகளில் கூட திருமணம் நடைபெற்றுவிடுகிறது.. காரணம் ,அவை சந்திரனுக்கு திரிகோணங்களாகவும்,2ஆமிட சம்பந்தமும் பெற்றிருக்கும்!
சுப ராசிகளில் சந்திரன்,ராகு சேர்க்கை பெற்றவர்களுக்கு உள்ளுணர்வு சிறப்பாக இருக்கும். ஆனால் உடன் செவ்வாய் இணைந்தால், அது, ஜாதகருக்கு, ஹிஸ்டீரியா, வலிப்பு நோய் போன்ற எதிர்மறை பலன்களை உண்டாக்கிவிடும்.

Saturday, November 11, 2017


கண்டாந்தர நட்சத்திர தோஷம்-உதாரண ஜாதகம் 


குழந்தை பிறப்பு : 8.1.2016, வெள்ளிக் கிழமை 12.34 PM (Rectified), சேலம்., 

ஆண் குழந்தை ஜனனம்
.
நட்சத்திரம்     : மூலம் 1 ஆம் பாதம்.
(கண்டாந்தர நட்சத்திரம்)

திதி            : கிருஷ்ணபட்ச சதூர்தசி

சூனிய ராசிகள் :  மிதுனம்,கன்னி தனுசு,மீனம்.

குழந்தை பிறப்பு : சிசேரியன் (மாலை சுற்றி பிறந்தது)

யோகம்         : விருத்தி
யோகி        : புதன்
அவயோகி         : செவ்வாய்
பிரதியோகி        : செவ்வாய்

புதன் அஸ்தங்கம். கேது தசையில் இருப்பு: 6.2.13.


கேது




ல  சந்




      ராசி
8.1.2016, சேலம்.

புத

  நவாம்சம் 

கேது
புத  (வ)
குரு (வ)
ராகு

சந், சூரி
சுக், சனி
செவ்
ராகு
சுக், செவ், குரு,சனி
சூரி



18.3.2022 வரை கேது தசை

14.10.2016 வரை சுக்கிர புக்தி

20.1.2016 வரை கேது தசையில் சுக்கிர புக்தியில், செவ்வாய் பிரியந்தர தசை நடைபெற்று வருகிறது. மூலம் நட்சத்திரம் 1 பாகை 30 கலை 49 விகலையில் உள்ளது. மூலம் நட்சத்திரத்தை 12 சம பாகமாக பிரிக்க 2வது பாகம் வருகிறது. இந்த பாகம் கண்டாந்தர கண்டம் என்கிற தோஷத்தைப் பெறுகிறது. இதன் பலன்  தாய் மற்றும் தாய் வர்க்கத்தை பாதிக்கும். லக்னத்தை லக்னநாதன் செவ்வாய் பார்ப்பதால், குழந்தைக்கு கண்டமில்லை . குருவும் 5 ஆம் வீட்டிலிருந்து, வக்ர ரீதியில் லக்னத்தைப் பார்க்கிறது.

திதியானது கிருஷ்ணபட்ச சதூர்தசியாகும். அன்று திதி சூன்யம் பெறும் ராசிகள், மிதுனம்,கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகும்.
இந்த நான்கு ராசிகளின் செயல்பாடுகளை நாம் பார்க்க வேண்டும். இதில் மூன்றாம் வீடு இளைய சகோதரத்தையும், 6 ஆம் வீடு தாய் மாமனையும், 9 ஆம் வீடு தந்தையையும், 12 ஆம் வீடு விரையத்தையும் குறிக்கும்.

இளைய சகோதரத்தைப் பற்றி இப்போது பேசவேண்டியதில்லை. 12 ஆம் வீட்டு பலனையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது 9 ஆம் வீடு. 9 ஆம் வீட்டிற்கதிபதியான குரு 5 ஆம் வீட்டிலிருந்து பார்ப்பதோடு மட்டும் அல்லாமல், 9 ஆம் வீட்டில் இருக்கும் தந்தைக்காரகனாகிய சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் தந்தை ஸ்தானத்திற்கு தோஷம் இல்லை.

விஞ்சியிருப்பது, சூன் ய  ராசிகளில் ஒன்றான கன்னி மட்டுமே. தாய் காரகனாகிய சந்திரன், தன்னுடைய தாய் ஸ்தானத்திலிருந்து 6 ஆம் வீட்டில் சூரியனுடன் இருந்தாலும்,, குரு பார்ப்பதினால் தாய்க்கு பெரிய அளவில் தோஷமில்லை.

நட்சத்திரப் பிரகாரம் கண்டாந்தர நட்சத்திரம் என்பது உண்மைதான். இருந்தாலும், இயற்கை சுப கிரகமாகிய குரு பார்ப்பதினால் தோஷம் பெருமளவில் குறைகிறது.

சூன் ய ராசிகளில் பெருமளவு பாதிப்புக்குள்ளாவது கன்னி மட்டுமே. அதன் நாயகன் புதன் வக்ரரீதியாக 10 ஆம் வீட்டில் இருக்கிறார். அவர் இருக்கும் நட்சத்திரம் உத்திராடம்.

இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை, 6 ஆம் வீடு என்பது தாய் மாமனை குறிக்கும். அங்கே ராகு இருப்பதும், அந்த வீட்டிற்கு ஏழாம் வீட்டில் தசை நடத்தும் கேது, பூரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்து இருப்பதும், அதற்குரிய குரு 6 ஆம் வீட்டிற்கு 12 இல் மறைந்து இருப்பதும் தாய் மாமனுக்கு தோஷமே.

19.1.2016 வரை, கேது தசையில் சுக்கிரன் அந்தரம், செவ்வாய் பிரயாந்தரம் நடைபெறுகிறது. இந்த காலகட்டம் தாய்மாமனுக்கு கண்டம் என்றே சொல்லலாம்.

சந்தர்ப்பவசமாக, 13.1.16 அன்று இரவு சுமார் 11.15 மணி அளவில் தாய் மாமன் ஒரு விபத்தை சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது. அந்த நேரத்தைக் கணிக்கும்போது கன்னி லக்னமாக வருகிறது. மேற்குறிப்பிட்ட குழந்தையின் ஜாதகப்படி தாய் மாமனின் ஸ்தானமும் கன்னியே ஆகும்.

இதன் மூலம் நாம் அறிய வேண்டியது, திதி சூன் யம் பெறும் ராசிகள், தங்கல்து இயல்பை ஏதோ ஒரு வகையில் காட்டிவிடும். உதாரண ஜாதகத்தில், 6 ஆம் வீடு கன்னி என்பதாலும், அது திதி சூன்யம் பெறும் ராசி என்பதாலும், அந்த இடம் தாய் மாமனைக் குறிக்கும் என்பதாலும், தாய் மாமனுக்கு கண்டத்தைக் காண்பித்திருக்கிறது.





விபத்து நடந்த நேரத்தில் கணித்த ஜாதகம் கீழே.


Tuesday, October 31, 2017

மணவாழ்க்கை – ஓர் ஜோதிட அலசல்



ஜாதகத்தில் திருமணம் நடப்பதற்கு பார்க்கவேண்டிய முக்கியமான பாவகங்கள் 2,4,5,7,9 மற்றும் 11,12 ஆகிய பாவகங்கள் ஆகும். இவற்றில்
2ஆம் பாவகம் வருமானம், பேச்சு ஆகியவற்றைக் குறிக்கும். 4ஆம் பாவகம் வீடு,வாகனம்,வசதியான வாழ்க்கை போன்றவற்றைக் குறிக்கும். 5ஆம் பாவகம் புத்திர சந்தானத்தைக் குறிக்கும். 7ஆம் பாவகம் வாழ்க்கைத்துணைபற்றிய விஷயங்களைக் குறிக்கும். 9ஆம் பாவகம், அதிர்ஷ்டம், தெய்வ அனுகூலம் மற்றும் குழந்தை பாக்கியத்தையும் குறிக்கும். 11ஆம் பாவகம் விருப்பங்கள் நிறைவேறுதலை குறிக்கும் மற்றும் இரண்டாம் திருமணத்தையும் குறிக்கும். 12ஆம் பாவகம் படுக்கையறை சந்தோஷம் மற்றும் நிம்மதியான உறக்கத்தைக் குறிக்கும்.
ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு மேற்கூறிய அத்தனை அம்சங்களும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை ஆகும். வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேற்கண்ட விஷயங்களையும் ஆராய வேண்டும். இதில் 2ஆம் பாவகம் கெட்டிருந்தால் பொருத்தம் பார்ப்பதே வீண்.
அடுத்து செவ்வாய். ஒருவருக்கு செவ்வாய் 1,2,7,8 ஆகிய இடங்களில் இருந்தால் 2ஆம் பாவகத்தை அது எப்படியாவது கெடுக்கும். 1ஆம் இடமான லக்னத்தில் இருந்தால் ஜாதகரும், 7ஆம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணையும் அனுசரித்து செல்லும் குணம் இல்லாமல் இருப்பார்கள்.அதன் காரணமாக தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு 2ஆம் பாவகம் கெடும். அதைப்போலவே 2ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் 8ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் 2ஆம் இடத்தை பார்ப்பதாலும் குத்தல் பேச்சு, குதர்க்கம் போன்றவற்றால் கணவன் மனைவி இடையே நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும்.
சம்பத்து மற்றும் பரம மைத்திரமான நட்சத்திரங்களில் தம்பதிகள் அமைவது மிகவும் சிறப்பாகும். அதாவது ஜென்ம நட்சத்திரத்திற்கு 2,12 ஆம் நட்சத்திரங்களாகவும் அவை ஒருவருக்கொருவர் திரிகோண ராசிகளிலும் (1,5,9) அமைவதாகும்.
2ஆம் அதிபதி மறைவு ஸ்தானங்களில் இருப்பது, நீசமாகி இருப்பது. அவயோகியின் சாரம் ஏறி இருப்பது. துர்ஸ்தானாதிபதிகள் 2மிடத்தில் இருப்பது போன்றவை 2ஆம் கெடுவதற்கு காரணமாக அமைகின்றன.
சூரியன் செவ்வாய் சேர்க்கை 1,2 ஆம் இடங்களில் இருக்கும் போது பெரும்பாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலான தூரம் 41 பாகைகளுக்கு மிகுந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கு தோஷமே.
எனவே பொருத்தம் பார்ப்பதோடு மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து தான் மணமக்களை இணைக்கவேண்டும்...
நிறைவாக அனுபவ பூர்வமான ஒரு விஷயம் என்னவென்றால் இதில் பொருத்தம் பார்த்தாலும்,பார்க்காவிட்டாலும், காதல் திருமணமாக இருந்தாலும், நிச்கயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் யார் யாருடன் சேர வேண்டுமோ அந்த ஜாதகங்கள் தான் இணைகின்றன.
கர்மாவின் படிதான் வாழ்க்கை நகர்கிறது என்பது தான் நிதர்சனம்.



Monday, October 30, 2017

ஜோதிட நுணுக்கங்கள் - ஏழாம் பாவம்



லக்னத்திற்கு சமமாக ஏழாம் பாவத்தை தொடாமல், ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது.என்னதான் , நட்சத்திர பொருத்தம், ராசி, லக்ன பொருத்தம் இருந்து , திருமணம் நடந்தாலும், இருவர் ஜாதகத்திலுமோ அல்லது ஒருவர் ஜாதகத்தில் மட்டுமோ, மறுமணம் நடக்க வேண்டும் என்று இருந்தால், கண்டிப்பாக நடந்தே தீரும்.7,11 அதிபதிகள் எவ்விதத்திலாவது அன்னியோனியமாக இருந்தால், இரண்டாம் திருமணம் நிச்சயம் நடந்தே தீரும்.
11 ஆம் அதிபதி வலிமை அடைந்து இருந்து அவன் தசை நடை பெற்றாலும், இரண்டாம் திருமணம் நடந்தேறும்.7 இல் குரு இருந்தால் இளைய மனைவி மூலம் குழந்தை பெறுவதை குறிக்கும்.
துறவறம் போவதற்கு 7 ஆம் இடம் கேட்டு இருக்க வேண்டும். அதில், 5,9 ஆம் இடங்கள் பலம் பெற்று இருந்தால், நல்ல சாமியார், அதுவும் கெட்டு இருந்தால் போலி சாமியார். இதில் கேதுவின் நிலையையும் ஆராய வேண்டியது அவசியம்.7 ஆம் வீடு அல்லது 2 ஆம் வீடு இவற்றுக்கு கேது சம்பந்தம், ஏழாம் அதிபதி பகை , நீசம் பெறுவது, இந்த அமைப்புகளெல்லாம், துறவரத்தை குறிக்கும். ராகு, கேதுக்களுக்கென்று தனி வீடுகள் இல்லை. ராகு கும்ப சனியை போலவும், கேது, விருச்சிக செவ்வாய் போலவும் பலன் கொடுக்கும். இதில், சம்பந்தப் பட்ட ஜாதகருக்கு, கும்பமும், விருச்சிகமும் எந்த பாவமாக வருகிறதென்றும், சனி மற்றும் செவ்வாயின் நிலையை ஆராய்ந்தும் , ராகு , கேதுவின் பலத்தை கணக்கிட வேண்டும்.
சந்திரனுடன் ராகு, கேது இருப்பது, எப்படியும் தவறாகும். கேது மனதை நோகடிப்பார். ராகு, வீரியத்துடன், தவறுகளை செய்யத் தூண்டுவார். சந்திரன், ராகு, கேதுக்களுக்கு, குறைந்தது 12 பாகை முன்போ அல்லது பின்போ தள்ளி இருந்தால், பாதிப்பு இல்லை. எனினும், ஒரு பாவத்தில், இவை சேர்ந்து இருப்பது தவறுதான். மிகச்சிறிய அளவிலாவது, அது வெளிப்படும்.

ஒரு ஸ்தானத்தின் பலனை ஆராயும் போது , ஸ்தான அதிபதி இருக்கும் வீடு, ஸ்தானாதிபதி ஏறிய நட்சத்திரம், ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் இவற்றை அனுசரித்து பலன் சொல்ல வேண்டும். இவற்றுள் முதன்மையானதாக, ஸ்தானாதிபதி இருக்கும் இடத்தையொட்டியே பலன்கள் இருக்கும். மற்ற அம்சங்கள், நன்மை அல்லது தீமையை கூட்டவோ, குறைக்கவோ உதவும் அவ்வளவுதான்.

ஒரு ஸ்தானத்தின் பலனை ஆராயும் போது, அந்த ஸ்தானாதிபதி லக்னத்திற்கு சுப ஸ்தானங்களில் நட்பு ரீதியில் இருந்தால் நன்மைகள் நடக்கும். பகை, நீசம் அஸ்தமனம், கெட்ட பாவங்களில் இருந்தால் தீமைகள் நடக்கும். மறைவு ஸ்தானங்களில் இருந்தால், வினைப்பயனை அனுபவிக்கும் நிலை உண்டாகும். இது எந்த பரிகாரத்திற்கும் கட்டுப்படாது.

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...