Friday, February 9, 2018




மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம்.
ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள் உண்டு. அவற்றில் மிகச் சரியாக பொருந்துபவற்றைக் காண்போம்.
1.லக்னத்துக்கு 7க்குடையவன் நவம்ஸத்தில் அமர்ந்திருக்கும் ராசியோ அல்லது அதற்குத் திரிகோணங்களோ மனைவியின் ராசியாக வரும்.
அதாவது ஜாதகர் கன்னி லக்னம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு 7ஆம் வீடு மீனம். அதற்கு அதிபதியான குரு நவாம்ஸக் கட்டத்தில் கடகத்தில் இருப்பதாகக் கொள்வோம். இதன்படி கடகம் மற்றும் அதன் திரிகோணங்களான விருச்சிகம், மீனராசிகளில் ஒன்று மனைவியின் ராசியாக இருக்கும்.
2.ஜைமினி சூத்திரத்தின்படி, தாரக்காரகன் ராசிக்கட்டத்தில் எங்கு அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசி மற்றும் அதற்கு திரிகோண ராசிகளில் ஒன்றாக மனைவியின் ராசி இருக்கும்.
தாரக்காரகன் என்பவர், ராசிக்கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களில் எந்த கிரகம், தான் அமர்ந்திருக்கும் வீட்டின் 30 பாகைகளில் குறைவான தூரம் பயணம் செய்திருக்கிறதோ அந்த கிரகமே தாரக்காரகன் ஆவார். சாஃப்ட்வேரில் பார்க்கும் பொழுது கிரக பாதச்சாரங்களில் DK என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
3.ஜைமினி சூத்திரங்களில் இன்னொன்று ஆருடபதம். லக்னம் முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆருடபதம் கணிக்கலாம். அவற்றில் 7ஆம் வீட்டின் ஆருடபதம் ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் விழுகிறதோ அந்த வீட்டின் அதிபதி அமர்ந்திருக்கும் ராசியோ அல்லது அதற்குத் திரிகோண ராசிகளில் ஒன்றோ மனைவியின் ராசியாக அமையும். சாஃப்ட்வேரில் கணிக்கப்பட்ட ராசிக்கட்டத்தில் A7 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேற்கண்ட மூன்று விதிகளில் ஏதோ ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றுமோ அனைவருக்கும் பொருந்தி வருகிறது.




Thursday, February 1, 2018



லக்னாதிபதி பாதக ஸ்தானங்களில் இருந்து திரிகோணங்களும் பலமிழந்திருந்தால் சாதகமான தசை நடந்தாலும் புண்ணியமில்லை.



சில நேரங்களில் 6,8,12ஆம் அதிபதி தசாபுத்திகளில் கூட திருமணம் நடைபெற்றுவிடுகிறது.. காரணம் ,அவை சந்திரனுக்கு திரிகோணங்களாகவும்,2ஆமிட சம்பந்தமும் பெற்றிருக்கும்!
சுப ராசிகளில் சந்திரன்,ராகு சேர்க்கை பெற்றவர்களுக்கு உள்ளுணர்வு சிறப்பாக இருக்கும். ஆனால் உடன் செவ்வாய் இணைந்தால், அது, ஜாதகருக்கு, ஹிஸ்டீரியா, வலிப்பு நோய் போன்ற எதிர்மறை பலன்களை உண்டாக்கிவிடும்.

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...